The Agenda: Moving Srilanka Forward

சிங்களத்தின் சிறுபிள்ளைத்தனமான ராசதந்திர அபத்தங்கள்-சிறுபிள்ளைகளை வைத்து அறுவடையாகும் அபத்தங்கள் மேலும் மேலும் அழுத்தமாக தெளிவாக்கும் உண்மைகள்

தோற்றுபோகும் சிங்களத்தின் சிறுபிள்ளைத்தனங்கள்

மூத்த சிங்கள அரசியல்வாதிகளாலும், ராசதந்திரிகளாலும் உலக அரங்கில் செய்ய முடியாததை செய்ய முயலும் சிங்கள சிறுபிள்ளைகள்-Srilankan Without Borders-ஒரு அபத்தமான அரசியல் வெளிப்பாடு.

இன்று கனடாவின் மிகபெருமாகாணமான ஒன்ராரியோவின் தலைநகர் ரொரன்ரோவில் TVO தொலைக்காட்சி The Agenda (the flagship current affairs program) நிகழ்ச்சியில் Moving Srilanka Forward எனும் தலைப்பில் கலந்தாய்வு ஒன்று நிகழ்ந்தது.

இந்நிகழ்வில் கனடிய தமிழர் தேசிய அவையின் இயக்குநர் கிருஸ்ணா சரவணமுத்து , தமிழ்த்தேசிய மனித உரிமைச்செயற்பாட்டாளர் நீதன் சான் ஆகிய இருவரும் ஓர் அணியிலும், எல்லைகள் அற்ற சிறிலங்கர் என்ற அமைப்பைச்சேர்ந்த ரொமேஸ் கெட்டியராச்சி , நத்தாலி டன்கோதுவக்கே என்பவர் மறு அணியிலுமாக இணைந்திருந்திருந்தார்கள்

 கிருஸ்ணாவும் நீதனும், இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு என்ன     என்பதை மிகவும் அழகாக அரசியல் ஆழுமையுடன் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி சிங்கள ராசதந்திரத்தின் அபத்தங்களை வெளிக்காட்டுவதாகவும், சககனடியர்களுக்கு தமிழர்களின் அரசியல் அவாவினையும்நியாயத்தையும் மறுமுறையும் ஓர்தடவை அழகாக புரியவைத்திருக்கும்.

 

கிறுஸ்ணாவும் நீதனும் இன்னுமொருமுறை சிறப்பாக களப்பணியார்றியுள்ளீர்கள்.

Videoவை பார்வையிட

2012 December 21 நம்பவிரும்புகிறோமா

21ம் நூற்றாண்டு ,எமது அடங்காத ஆசைகளையும் மீறிய பலவற்றை பரிசாக தந்தது.

இன்று பல நவீன முறைகளில்,உலகின் எம்மூலைக்கும் அதிவிரைவாக சென்றுவிடுகிறோம்.நவீன மருத்துவத்தின் உபயம் ,நீண்ட காலம் வாழ்கிறோம் உன்னதமான வாழ்வை கொண்டிருக்கிறோம்.

எல்லாம் இருப்பவர்க்கு 21ம் நூற்றாண்டில் வாழ்வென்பது அதிசயத்தக்கதாக அமைந்துள்ளது. வறியவர்களுக்கோ வாழ்வு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. வறியவர்களின் நம்பிக்கையீனங்கள் புரட்சிகள் வசதியானவர்களுக்கு ஒரு தலையிடி.

ஆனாலும் வாழ்வு மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவே பொதுவில் உள்ளது.

21ம் நூற்றாண்டு பலவற்றை அள்ளித்தந்துள்ளது. பல நவீன துறைகளும், அதனூடாக சிறந்த வேலைவாய்ப்புக்களும் என செல்வசிறப்புடனேயே வாழ்கிறோம்.

என்றுமே வற்றாத பொருற்களஞ்சியத்துடன் மினுமினுப்பும் கதகதப்பும் குறைவில்லாத கூட்டு அங்காடிகள். நாவின் உணர்வு மொட்டுக்களை சிலிர்க்கவைக்கும் நவீன உணவகங்கள். நண்பர்களுடன் இனிய பொழுதுகள் இல்லாவிடில் தனிமையில் இனிமைகாணுதல், அன்றாட வாழ்வின் அழுத்தங்களை போக்க நீலநெடுங் கடல்கரையில் சுகபோக விடுமுறைகள்.

இவ்வாறு எல்லாமே சுகமாக இருக்க, ”உலகம் அழிவை எதிர்நோக்குகின்றது” என்ற செய்தி யாருக்கு வேண்டும்.அடுத்து அது உண்மையெனில் , எல்லா செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பாகியிருக்கும் என்ற அப்பாவித்தனம்.

எமது கண்கள் பொய்சொல்கின்றனவா!…………

எமது சூரிய உடும்பத்தை சேர்ந்த , மிகவும் நீண்ட வட்டபாதையில், 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூமியை நெருங்கும், ஓர் ‘அழிவும் ஆக்கமும்” உண்டாக்கும் கிரகம் -இப்போது எம்மை நெருங்கி கொண்டிருப்பது பொய்யாகுமா!…..

 

தமிழகத்தின் சாபம்-நித்தியானந்தாவின் கோமாளிக்கூத்து

சாதனைகளின் முகவரியான தமிழன், சாபங்களின் முகவுரையானதென்ன…

மதுரை ஆதீனம்

இது கிட்டத்தட்ட 1400 வருடங்களுக்கு முன்னர்  திருஞானசம்பந்தரால் அமைக்கபெற்ற புனித சைவபீடம்.

சைவசித்தாந்தங்கள் தத்துவங்கள் வளர்க்கவும் பாதுகாக்கவும் ,அன்றைய சோழ பாண்டிய தமிழ்மன்னர்கள் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மகான்களின் சபை.

அக்னீச்சுவரர் கோவில்-பரசரா முனிவருக்கு சிவன் ஊளிக்கூத்தை(cosmic dance) கற்பித்த தலம்

திருப்புறம்பியம் கோவில்- 9ம் நூற்றாண்டில் சோழ மன்னன், ஆதித்தயா-1 ல் உருவாக்கப்பட்டது

காசனேசுவரம் கோவில்

பனாகபரமேசுவரம் கோவில்

போன்ற (தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த) தலங்கள் மதுரை ஆதீனத்தாலேயே நிர்வகிக்கபடுபவை

சைவ பெருமக்களின் புனிதபீடம் எவ்வாறு சாக்கடையில் சேரமுடியும். தமிழ்நாட்டின் அறிவியல் சமூகத்தார் அவ்வாறு இதை அனுமதிக்க முடியும்.

கள்ளச்சாமியார்களின் ஊற்றுவாயாக உலகின் பலமூலைகள் இருந்தாலும் அவர்களின் கூடாராகமாக தம்நாடு மாறுவதை எந்தநாட்டு மக்களும் விரும்பார்.

தவறுகளனைத்தும் தோலுரித்து காட்டப்பட்ட பின்னரும் நித்தியானந்தா போன்றவர் இன்னும் வலுவாக காழூன்றி நிக்கின்றார்கள் எனின் தமிழ்நாட்டு

பெருமக்கள் வாழா இருப்பதே காரணம். மதுரை மறவர்களின் அசதியே காரணம்.

தொடர்ச்சியான தாக்குதலுக்குள்ளாகும் தமிழர் வாழ்வு.

கோடிக்கணக்கான பெருமக்களின் பூர்வீகமான தமிழகம் தொடர்ச்சியாக சுரண்டல்களுக்காக சோரம் போன தேசமா……

 

M.I.A மாதங்கி அருட்பிரகாசம்

மாதங்கி,ஈழத்தமிழர்களான அருட்பிரகாசம்,கலா தம்பதியருக்கு லண்டனில் பிறந்தவர்.ஈழத்தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணத்தில் தன் சிறுபராயத்தை கழித்த மாதங்கி,லண்டனில் வளர்ந்திருந்தாலும் வெகுவாக தமிழை பிரதிபலிக்கின்றார்.

இவரது தந்தை ரசிய பல்கலைகழகத்தில் பொறியியல் கற்றவர்,ஈழபுரட்சிகர மாணவர் இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்,தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால நண்பர்.பொருளாதார(முதலாளித்துவ)நலன்களை மட்டுமே முன்நிறுத்தி குப்பைகளால் நிரப்பபட்ட மேற்கத்தைய வாழ்க்கை முறைக்குள்,தெளிந்தசிந்தனையுடன் குறுக்கு வழிநாடாது தன்திறமையில் மட்டும் நம்பிக்கை கொண்டு வழையாமை கைக்கொண்டு சிகரத்தில் நிற்கும் மாதங்கியை பெற்று வளர்த்த தாயார்(கலா)பெருமைக்கும் சிறப்பிற்கும் உரியவர்.

மாசு படாத பாடல்களை மட்டுமே வெளியிட விருப்புள்ள மாயா(M.I.A)பல வித அழுத்தங்களை முகம் கொடுத்து வெற்றிகண்டவர்.தமிழர் இனஅழிப்புக்கு எதிராக தன் இசைத்திறமையை வெகுவாக பயன்படுத்திவருகிறார்.

மேற்கத்தைய நாடுகளில் வாழும் எம் இன்றைய தலைமுறை பெண்கள் இவரிடம் கற்றுகொள்ள ஏராளம் உள.

ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளாகின்ற இவர், எவ்வாறாகினும் பல பிரமிப்புக்களை உண்டாக்கியவரே. தமிழர்க்கெதிரான இனவழிப்பு போர் விரித்த காலஓட்டத்தில் ஆங்காங்கே மிளிரும் நட்சத்திரங்களில் ஒன்று M.I.A

M.I.A மாதங்கி

Here She Rocks One Monre Time.

Steve Jobs மலை ஒன்று சரிந்தது


ஒரு சில மணித்தியாலத்திற்கு முன் பூமி சுழல்வதை நிறுத்தி ஒரு கோடி கண்ணீர் துளி சிந்தி நகர்ந்தது.

அறிவார்ந்த மூளை ஒன்று இயக்கம் நிறுத்தி

தொழில்நுட்பம் துயருற்றது.

உலகம் கண்டது எத்தனையோ புரட்சிகள்

தகவல் தொழில்நுட்பம்  ஏற்படுத்திய வழி

இளம் சமுதாயத்தின் கைகளில் உலக அரசியல்

உபயகாரர்களில் ஒருவர் Steve Jobs.

மதுக்கோப்பையிலே மயங்கி

காதலில் கிறங்கி கிடந்தது பெருங்கூட்டம்

இவன் கனவுகள்

இலத்திரன்களோடு.

21 வயதிலேயே இவனுள்

இமயம் தொடும் ஆசை,இன்று

விண்முட்டும் பலர் வெற்றிக்கு

இவன்தான் பாதை.

தொழில்நுட்ப புரட்ச்சியில்

ஒரு தீப்பொறி இவன்

Silicon Valley ன் சூரியக்கடவுள்.

ஆன்மீக பூமியில் மொட்டை அடித்த

இவன் படைப்புகள் பல

அரசியல்வாதிகலுக்கு மொட்டை அடிக்குது.

iMac,iPad,iPhone,iPodஇவன் பாதையின் வெற்றிக்கற்கள்.

சிரிய இரத்தத்தில் உதித்த இவன்

படைப்புகள்,நாளைய சிரியாவின் உதயத்திற்கு காரணம் கூட

கீழத்தேய தத்துவத்தில் பற்றுக்கொண்ட இவன் மனம்

காயமே இது பொய்யட காற்றடைத்த பையடா

வாழ்விற்குள் போராடு ,சாவதற்குள் வென்றிடு என்றிற்று.

Steve Jobs ஒரு சரித்திரம்,

சாவினை வெற்றிகொண்ட  ஒரு வாழ்வு

நீ வருவாயென-காத்திருக்கிறேன் காலம்கடந்தும்

IT IS SAID SOME LIVES ARE LINKED ACROSS TIMES,,,

CONNECTED  BY ANCIENT CALLING THAT ECHOES THROUGH TIMES,,,,,,,,,,,,,,,,,  ,,,,,,,,,,,,, ,,,,,,,,  ,,,,,, ,,, ,, ,

தசைகளும்,தசை நார்களும்

கிழிந்து இரத்தம் சொட்டியும்

வலிக்கவில்லை

உனக்கான காத்திருப்பில்.

**************

நீ யாரோ ,உன்னுடன் கை குலுக்க ஆசை

விம்மி வெடிக்கும்

நெஞ்சுக்கூட்டில்

அழுத்தி அழுத்தி

வெளிவர துடிக்கும்

தொண்டைக்கூட்டில்

சிக்கிகொண்டு

துடிக்க துடிக்க

வதைக்கும்,

சொல்லிட நினைக்கும்

நெஞ்சம்,

கொஞ்சிட துடிக்கும்

மனம்,

வார்த்தைகள் அற்று

துவழும் உதடுகள்,

கெஞ்சிட கெஞ்சிட

வதைக்கும்

நெஞ்சுக்குழியில் சிக்கிட்ட வார்த்தைகள்,

உன்னுடன் சிரித்து

உன்மேல் புரண்டு

உன் மடியில் தவழ்ந்து

உனை ரசித்து

உன் மடியில் பிறந்து

உன் மடியில் உடல் துறந்தோம்

வாழ்வே நீன் அழகே தனி

****அற்புதமான EDITING உன்னுடன் கை குழுக்க ஆசை****ellalan

எங்கே போகிறோம்

பாவமே எல்லோரும்
மலர்களோடு மோதி
மலைகளோடு உறவு

தென்றலை உணராதர்
புயலோடு புணர்வு

தேடல் தெரியாதர்
தெரிவுகளில் மட்டும் கவனம்

புரியாத வாழ்க்கையின்
புதிர்களாக இவர்கள்

வாழ்க்கை நச்சு வாயு கிளப்பி
பூவாசனை என்பதறியார்

கரப்பான் பூச்சியோடு மட்டும் சமரசம்

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.